"புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும்" கே.எம்.சி.எச் சார்பில் உலக புற்றுநோய் தினம் கையெழுத்து பிரச்சாரம்


புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் அல்ல, இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க, கே.எம்.சி.எச் மருத்துவமனை உலக புற்றுநோய் தினமான 04.02.2017 இன்று “கோயம்புத்தூர் விழா” குழுவினர்களுடன் இணைந்து, கோயம்புத்தூர் மத்திய இரயில் நிலையத்தில் ஒரு கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தினை தலைமை விருந்தினராக கோயமுத்தூர் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சி பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கே.எம்.சி.எச்- ன் விரிவான புற்றுநோய் பராமரிப்பு மைய அணியின் மருத்துவர்கள் மூலம், புற்றுநோயை எந்த சிக்கலான நேரங்களில் சமாளிக்க முடியும் என்ற தெளிவான செய்தியை கொடுத்து நிச்சயமாக புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும் என்பதே ஆகம். புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், சுகாதாரத்துறை ஒரு பெரிய அளவில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் தேவைகளைப் புரிந்து, ஒரு ஆரோக்கியமான சமூகத்தின், குறிப்பாக புகைபிடிப்பவர்களை முன்னிலைப்படுத்தி ஒரு வழக்கமான அடிப்படையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இப்பணியில் ஈடுபட்டுள்ளது. 

கே.எம்.சி.எச்  à®®à®°à¯à®¤à¯à®¤à¯à®µà®®à®©à¯ˆà®¯à®¿à®²à¯ இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண், பெண்களுக்கான சிறந்த உடல்பரிசோதனை, மிகக்குறைந்த கட்டணத்தில் (ரூ.999க்கு) செய்து கொடுக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள முன்வந்தனர். இந்த 2017-ம் ஆண்டிற்குள் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 25,000 பெண்களுக்கு “மார்பக உடல்நலம்” மற்றும் “கர்பப்பை வாய் நலம்” பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே கே.எம்.சி.எச் மருத்துவமனையின் நோக்கமாகும்.

 

இதனை கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி, கோவை இரயில் நிலையம் ஸ்டேஷன் மாஸ்டர் சின்னராஜு மற்றும் “கோயம்புத்தூர் விழா” அமைப்பு குழுவினர் ஐஸ்வர்யா, கே.எம்.சி.எச் டீன் குமரன் ஆகியோர் முன்னிலையிலும் காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் பொதுமக்கள் பலர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்தனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தகவல் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...